இயற்பியல் - ஒரு முழு பாடநூல்/நிலை மின்னியல்
நிலை மின்னியல் (Electrostatics) என்பது நிலையான மின்னூட்டம் அல்லது ஓய்வு நிலையில் மின்னூட்டங்களினால் ஏற்படும் அடிப்படை நிகழ்வுகள் மற்றும் அதன் பண்புகளைப் பற்றி விளக்கும் ஒரு இயற்பியல் துறையாகும். பொருட்களில் ஏற்படும் எதிர்மின்னிகள் இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடையச்செய்கிறது. அம்பர் (ஆம்பர்) போன்ற சில பொருட்கள் தூசு, மரத்துகள் ஆகியவற்றை ஈர்க்கும் ஆற்றல் உள்ளவை என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட ஒன்றாகும். electron என்ற சொல் அம்பரின் கிரேக்க மூலச்சொல்லான elektron என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். ஈர்ப்புப் புலத்தில் உள்ள நிறைகளைப் போன்றதே மின்புலத்திலுள்ள மின்னூட்டங்களும் ஆகும். மின்னூட்டங்கள் தங்களுக்கிடையே செயல்படும் விசைகளை பெற்றிருப்பதால் நிலையான ஆற்றலைப் பெற்றுள்ளன. இக்கருத்துக்கள் மின்னோட்டங்களின் பல பிரிவுகளிலும், அணு பற்றிய பல கொள்கையிலும் பெரிதும் பயன்படுத்துகின்றன.
உராய்வு மின்னியல்
தொகுகி.பி 600 இல், கிரேக்க அறிஞரான தாலஸ் என்பவர் அம்பர் போன்ற பொருளை கம்பளியில் தேய்த்தப் பொழுது, அது காகிதம் போன்ற பொருளினை கவரும் பண்பைப் பெறுவதாகக் கண்டுபிடித்தார். பிறகு கி.பி 17ஆம் நூற்றாண்டில் வில்லியம் கில் பெர்ட் என்பவர், கண்ணாடி, எபோனைட் போன்றவைகளை தகுந்த பொருட்களோடு தேய்க்கும் பொழுது, அதே பண்பினை பெறுகிறது என்பதை கண்டறிந்தார். இவ்வாறு கவரக்கூடியப் பண்புகளை பெறுவதறிந்த அதனை மேலும் ஆராய்ந்த போது அதற்குக் காரணம், அதிலுள்ள எதிர்மின்னிகள் தான் மின்சார ஊட்டப்படுகிறது எனபதை உணர்ந்தனர். அவ்வாறு தேய்க்கப்படும் பொழுது, மின்சார ஊட்டமடைகிற எதிர்மின்னிகள் கொண்டப் பொருட்களை electrified (மின்னூட்டம்) அடைந்தவை என்று கூறலாம். கிரேக்க மொழியில் அம்பர் என்று பொருள்படும் electron (எதிர்மின்னி) என்றச் சொல்லிருந்தே electrified (மின்னூட்டம்) என்றச் சொல் பெறப்பட்டவையாகும். இதுவே பிற்காலத்தில் electricity (மின்சாரம்) என்ற சொல்லாக திரிந்ததாகும். உராய்வினால் உருவாகும் மின்னோட்டம் உராய்வு மின்னோட்டம் என அழைக்கப்படும். ஒரு பொருளில் உள்ள மின்னூட்டங்கள் நகரவில்லை எனில், அவ்வுராய்வு மின்னோட்டத்தை நிலை மின்னோட்டம் என்றும் கூறலாம்.