இடன் அறிதல்
திருக்குறள் > அரசியல்
- 491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
- இடங்கண்ட பின்அல் லது.
- 492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
- ஆக்கம் பலவுந் தரும்.
- 493. ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
- போற்றார்கண் போற்றிச் செயின்.
- 494. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
- துன்னியார் துன்னிச் செயின்.
- 495. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
- நீங்கின் அதனைப் பிற.
- 496. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
- நாவாயும் ஓடா நிலத்து.
- 497. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
- எண்ணி இடத்தால் செயின்.
- 498. சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
- ஊக்கம் அழிந்து விடும்.
- 499. சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
- உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
- 500. காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
- வேலாள் முகத்த களிறு.