ஆத்திசூடி எளிய உரை

ஆத்தி சூடி.


ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

சொற்பொருள்
ஆத்தி-ஆத்திப் பூ மலையை; சூடி- சூடியிருக்கும் சிவனுடைய; அமர்ந்த- மனதில் அமர்ந்த(அன்பிற்குரிய) தேவனை- விநாயகக் கடவுளை; ஏத்தி ஏத்தி- எப்பொழுதும் துதித்து; தொழுவோம்-வணங்குவோம்
கருத்து

சிவ பெருமானின் அன்புக்குரிய பிள்ளையாகிய விநாயகரை நாம் எப்பொழுதும் வழிபட்டு வணங்குவோமாக

1 'அறஞ் செய விரும்புநத '
வைவ சொற்பொருள்
அறம்- நல்வாஊதலவழ்வு; செய- நடத்த; விரும்பு- விருப்பம் கொள்.
லவ கருத்து

2 ஆறுவது சினம்.
சொற்பொருள்
ஆறுவது- அடங்க வேண்டியது; சினம்- கோபம்.
கருத்து

நாம் அடக்க வேண்டியது சினமே ஆகும்.

3 இயல்வது கரவேல்

சொற்பொருள்
இயல்வது- உன்னால் செய்ய முடிவதை; கரவேல்- செய்யாமல் மறைத்து வைக்காதே.
கருத்து
நம்மால் முடிந்ததை மறைக்காமல் செய்ய வேண்டும்

4 ஈவது விலக்கேல்

சொற்பொருள்
ஈவது- கொடுப்பதை; விலக்கேல்- தடை செய்யாதே
கருத்து
பிறருக்குக் கொடுப்பதைத் தடுக்கக் கூடாது.

5 உடையது விளம்பேல்

சொற்பொருள்
உடையது- உன்னிடம் உள்ள திறமைகளை; விளம்பேல்- ஊர் அறியச் சொல்லாதெ.
கருத்து
நமது திறமைகளை வெளியே சொல்லக்கூடாது.

6 ஊக்கமது கைவிடேல் சொற்பொருள்
ஊக்க்கம் அதை- உற்சாகத்தை; கைவிடேல்- இழந்து விடாதே

கருத்து
ஒரு செயலைச் செய்யும் போது தடை ஏற்படுமாயினும், அது கண்டு உற்சாகம் குன்றிவிடக் கூடாது.

7 எண் எழுத்து இகழேல்

சொற்பொருள்
எண்-விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அடிப்படையான எண்ணையும்; எழுத்து -இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையான எழுத்தையும்; இகழேல்- அலட்சியம் செய்யாதே.

8 ஏற்பது இகழ்ச்சி

சொற்பொருள்
ஏற்பது-ஒருவரிடம் சென்று இரப்பது(இல்லை எனக் கேட்பது); இகழ்ச்சி- இழிவைத் தருவது)

கருத்து
யாசிப்பது இழிவு தரும் செயலாகும்

9 ஐயம் இட்டு உண்

சொற்பொருள்
ஐயம்; உணவு (உணவில்லாதோரின்) (ஐயம் வேறு பிச்சை வேறு;உணவில்லாதோர்க்கு வழங்குவது ஐயம்; பிச்சை எடுப்போருக்கு நாம் இடுவது பிச்சை; காண்க ஆண்டாள் திருப்பாவை - ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி-பாடல் 2)
கருத்து
உணவு தேவைப் படுவோர் யாராவது இருப்பின் அவருக்கு உணவிட்ட பின் உண்ணுதல் வேண்டும்.


10 ஒப்புரவு ஒழுகு

சொற்பொருள்
ஒப்புரவு- உலகத்தின் போக்கு அறிவது. ஒழுகு- அதன் படி நட.
கருத்து
உலகத்தின் போக்கு எப்படி என அறிந்து அதன் படி நடந்து கொள்ள வேண்டும்.

11 ஓதுவது ஒழியேல்
சொற்பொருள்
ஓதுவது- கறபது; ஒழியேல்-விட்டு விடாதே.

கருத்து
எக்காரணமாயினும் படிப்பதை விடலாகாது.

12 ஔவியம் பேசேல்

சொற்பொருள்
ஔவியம்-பொறாமை; பேசேல்- பேசாதே
கருத்து
பொறாமை கொண்டு பேசுவது கூடாது.


13 அஃகம் சுருக்கேல்

சொற்பொருள்
அஃகம்- தானியங்களை; சுருக்கேல்- அளவில் குறைத்து விற்காதே
கருத்து
தானியங்கள் முதலிய பண்டங்களை அளவில் குறைத்து வியாபாரம் செய்யக் கூடாது.

14 கண்டு ஒன்று சொல்லேல்

சொற்பொருள்
கண்டு- ஒன்றைக் கண்டு; ஒன்று- காணாத வேறு ஒன்று; சொல்லேல் - சொல்லாதே.
கருத்து
நேரில் கண்டதற்கு மாறாக எதுவும் சொல்லாதே- அதாவது கண்டது ஒன்றாயிருக்க அதைத் திரித்து, காது மூக்கு வைத்துப் பெரிதாக்கிப் பேச்சதே. கண்ணால் கண்டதற்கு மாறாக எதுவும் கூறலாகாது.

15 ஙப் போல் வளை

சொற்பொருள்
ங போல்- ங என்ற எழுத்தைப் போல்; வளை- மற்றவரை ஆதரி.
கருத்து
ங எனும் எழுத்தைப் போல் அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டும்.

16 சனி நீராடு.

சொற்பொருள்
சனிக்கிழமை தோறும்; நீர் ஆடு- எண்ணெய் தேய்த்து நீரில் மூழ்கு.(சனி என்பதற்கு - குளிர்ந்த நீரில் - என்ற பொருளும் கொள்வர்.)
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து முழுக வேண்டும்

17 ஞயம் பட உரை
கருத்து

சொற்பொருள்
ஞயம்-இனைமை உண்டாகும்படி; உரை-சொல்
கருத்து
கேட்போருக்கு இன்பமுண்டாகும் படிப் பேசவேண்டும்.

18 இடம் பட வீடு எடேல்

சொற்பொருள்
வீடு- வீட்டை; இடம் பட- தேவைக்கு அதிகமான இடம் வீணாய்க் கிடக்கும் படி; எடேல்- கட்டாதே
கருத்து
அளவுக்கு மேல் இடம் வீணில் கிடக்க வீடு கட்டுதல் கூடாது.

19 இணக்கம் அறிந்து இணங்கு

சொற்பொருள்
இணக்கம் - ஒருவருடன் நட்பு செய்யும் முன் இவருடன் நட்பு செய்யலாமா என; அறிந்து- ஆராய்ந்து; இணங்கு-பிறகு நட்பு செய்.
கருத்து
ஒருவர் நல்ல குணமுடையவர் தானா என அறிந்து அதன் பின் அவருடன் நட்பு கொள்ளவேண்டும்.

20 தந்தை தாய் பேண்

சொற்பொருள்
தந்தை தாய்- பெற்றோரை;பேண்- ஆதரி
கருத்து
தாய் தந்தையரை அன்புடன் பாதுகாக்க வேண்டும்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=ஆத்திசூடி_எளிய_உரை&oldid=17696" இலிருந்து மீள்விக்கப்பட்டது