அவளிவநல்லூர்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள இந்த சிற்றூரில் சாட்சிநாத சுவாமிகள் எழுந்தருளி உள்ளார்.இறைவியின் பெயர் செளந்தரநாயகி . தை அமாவாசை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது."அவளா,இவளா" என்று ஐயுற நேர்ந்ததால் அவளிவ நல்லூர் என்று பெயர் வந்தது.பஞ்ச ஆரண்ய தலங்கள் என அழைக்கப்படும் தலங்களுள் இதுவும் ஒன்று.(திருக்கருகாவூர்,அவளிவநல்லூர்,ஹரித்வாரமங்கலம், ஆலங்குடி மற்றும் திருக்கொல்லம்புதூர்)