அவர் வயின் விதும்பல்
திருக்குறள் > கற்பியல்
- 1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
- நாளொற்றித் தேய்ந்த விரல்.
- 1262. இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
- கலங்கழியும் காரிகை நீத்து.
- 1263. உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
- வரல்நசைஇ இன்னும் உளேன்.
- 1264. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
- கோடுகொ டேறுமென் நெஞ்சு.
- 1265. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
- நீங்கும்என் மென்தோள் பசப்பு.
- 1266. வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
- பைதல்நோய் எல்லாம் கெட.
- 1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
- கண்அன்ன கேளிர் விரன்.
- 1268. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
- மாலை அயர்கம் விருந்து.
- 1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
- வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
- 1270. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
- உள்ளம் உடைந்துக்கக் கால்.