நிரலாக்கம் அறிமுகம்/கருத்துக்கள்

ஒவ்வொரு நிரலாக்க மொழியிலும் நிரல் தொடர்பான கருத்துக்களை இடுவதற்கான வழிமுறை உண்டு. இந்தக் கருத்துக்கள் நிரலின் கூறு இல்லை. இவை நிரலின் தொழிற்பாட்டில் எந்தவிதப் பங்களிப்பையும் செய்யாமாட்டின. ஆனால் நிரலை எழுதுபவர்களுக்கு, வாசிப்பவர்களுக்கு, பராமரிப்பவர்களுக்கு இந்தக் கருத்துக்கள் உதவுகின்றன. //, /* */, ## போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தி கருத்துக்கள் நிரல் வரிகளில் இருந்து வேறுபடுத்தப்படுகின்றன.

மொழிகள் வாரியாகக் கருத்துக்கள் தொகு

சி தொகு

 //This is a comment line

சி++ தொகு

 /* This is a comment line.
 Helps you to understand 
 better
 */
 //Single comment Line 

ஜாவா தொகு

ஜாவாவில் மேற்கூறிய இரண்டு வகை கருத்துகளையும் பயன்படுத்த இயலும். மேலும் கூடுதலாக, ஆவணப்படுத்தல் கருத்தும் (Documentation comments) உள்ளது. இது /** எனத் தொடங்கி */ என முடியும். பார்ப்பதற்கு சி++ பல்வரிக் கருத்துப் போன்று தோற்றமளித்தாலும், இதற்கென்று சிறப்பு செயல்பாடு உண்டு. ஆங்காங்கே @சொல் என எழுதப் பட்டிருக்கும் வரிகளைப் பட்டியலிட்டு மீயுரை மொழியில் ஆவணப்படுத்தும்.

 /** @author:Mr. Ponnavaiko
 @version:3.5
 */

மேற்கூறிய வரிகளில் @ குறியீட்டுக்குப் பின்னர் வரும் சொற்களுக்கான மதிப்புகளாக, ’:’ க்கு பின்னர் வரும் சொற்கள் சேமிக்கப்படும்.

பைத்தான் தொகு

பைத்தானில், கருத்துகள் # என்று தொடங்கும்.

 # A comment line in python